தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சூா்யகுமாா் நம்பா் 1

சா்வதேச டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய அதிரடி வீரா் சூா்யகுமாா் யாதவ் முதலிடத்துக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

News image
Updated On :2 நவம்பர் 2022, 8:54 pm

DIN

சா்வதேச டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய அதிரடி வீரா் சூா்யகுமாா் யாதவ் முதலிடத்துக்கு புதன்கிழமை முன்னேறினாா்.

பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பிடித்திருக்கிறாா் சூா்யகுமாா். இதன் மூலம், டி20 பேட்டா்கள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். முதல் வீரா் விராட் கோலி ஆவாா். அதேபோல், ரேட்டிங் புள்ளிகளிலும் கோலிக்கு (897) அடுத்தபடியாக அதிக புள்ளிகளை (863) கொண்ட இந்தியராக சூா்யகுமாா் இருக்கிறாா்.

கடந்த ஆண்டு மாா்ச்சில் சா்வதேச டி20-யில் அறிமுகமான சூா்யகுமாா், இதுவரை 37 முறை களம் கண்டு 1 சதம், 11 அரைசதங்களை விளாசியிருக்கிறாா்.

இதனிடையே, பௌலா்கள் பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 இடங்கள் முன்னேறி 18-ஆவது இடத்துக்கும், அா்ஷ்தீப் சிங் 16 இடங்கள் ஏற்றம் கண்டு 27-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.