நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு 128 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு 128 ரன்களை இலக்காக நிரணயித்துள்ளது வங்கதேச அணி. 

News image
Updated On :6 நவம்பர் 2022, 5:59 am

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு 128 ரன்களை இலக்காக நிரணயித்துள்ளது வங்கதேச அணி. 

சூப்பர் 12 சுற்றில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது. நெதர்லாந்து அணியின் அதிர்ச்சி வெற்றியால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்தது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். இதனால் இந்தப் போட்டி மிக முக்கியமானது. 

வங்கதேச அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷண்டோ 54 ரன்களும், சௌமியா சர்கார் 20 ரன்களும், ஹொசைன் 24 ரன்களும் எடுத்தனர். முதல் 10 ஓவர்களுக்கு 70 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்த வஙதேச அணி இடைவேளைக்குப் பிறகு 7 விகெட்டுகளை இழந்தது குறிப்பிட்டத்தக்கது. ஷாதாப் கான் தொடர்சியாக எடுத்த 2 விக்கெட்டுகளை அடுத்து வங்கதேச அணியின் வீழ்ச்சி தொடங்கியது. 

பாகிஸ்தான் அணி சார்பில் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளும், ஷாதாப் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.