

கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர். ராகுல் 35 பந்துகளில் 51 ரன்களும், சூர்யா 25 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராஜா 34 ரன்களும், ரெய்ன் புருல் 35 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஹார்திக், ஷமி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அரையிறுதி போட்டிக்கான் விவரங்கள்:
நவம்பர்-9: நியூசிலாந்து - பாகிஸ்தான். சிட்னி மைதானத்தில் விளையாட உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி.
நவம்பர்-10: இந்தியா - இங்கிலாந்து. அடிலெய்டு மைதானத்தில் விளையாட உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.