டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.
நவம்பர் 18 முதல் தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன.
டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.
ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடைபெறும் நியூசிலாந்து தொடரில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விவிஎஸ் லக்ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் செயல்படவுள்ளார். இதற்கு முன்பு அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களிலும் இந்தியாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ராகுல் டிராவிடுக்குப் பதிலாக லக்ஷ்மண் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
இந்திய அணி டிசம்பரில் வங்கதேசத்துக்குப் பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் ராகுல் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். மேலும் நியூசிலாந்தில் பேட்டிங் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனிட்கரும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சைராஜ் பெளதுலேவும் பணியாற்றவுள்ளார்கள்.
நாக்அவுட் ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்தால் இதுதான் முடிவா?
டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்று மழையால் பாதிக்கப்படுமா?
நியூசிலாந்து டி20 தொடர்: மாற்றம் ஏற்படுத்துமா பாண்டியா அணி?
சிலர் ஓய்வு பெறுவார்கள்: கவாஸ்கர் கணிப்பு!
உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா: தொடரும் சோகம்!
வேதனையும் பெருமையும்: டி20 உலகக் கோப்பை தோல்வி பற்றி விராட் கோலி