அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உலகக் கோப்பை: இத்தாலி, பிரேசில் வரிசையில் பிரான்ஸுக்கு இடம் கிடைக்குமா?

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது.

News image
Updated On :19 நவம்பர் 2022, 12:08 pm

DIN

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

கால்பந்து உலகக் கோப்பையை இரு நாடுகள் மட்டுமே அடுத்தடுத்து வென்றுள்ளன. 1934, 1938-ல் இத்தாலியும் 1958, 1962-ல் பிரேசிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளன. கடந்தமுறை உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணி - இத்தாலி, பிரேசில் வரிசையில் நிற்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

உலகக் கோப்பைப் போட்டியில் 16-வது முறையாகப் பங்கேற்றுள்ள பிரான்ஸ் அணி 1998, 2018-ல் உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. பிரான்ஸ் உள்ள குரூப் டி பிரிவில் டென்மார்க், ஆஸ்திரேலியா, துனிசியா ஆகிய நாடுகள் உள்ளன. பிரான்ஸ் அணி நவம்பர் 23 அன்று தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.