குட்டி ரசிகை இறப்பு: டேவிட் மில்லர் உருக்கமான பதிவு!  

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இறப்பு செய்தி சமூக வலைதளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
குட்டி ரசிகை இறப்பு: டேவிட் மில்லர் உருக்கமான பதிவு!  
Published on
Updated on
1 min read

பிரபல தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இறப்பு செய்தி சமூக வலைதளத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிரிக்கெட் வீரர் தற்போது இந்தியாவில் உள்ளார் மற்றும் சொந்த அணிக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறார். ராஞ்சியில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது மரணம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதில் அவர் கூறியதாவது: 

உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்!  எனக்கு தெரிந்ததிலேயே மிகப்பெரிய இதயம் கொண்டவள் நீ! எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையான எண்ணங்கள் மற்றும்  முகத்தில் புன்னகையின் மூலம் உன்னுடைய போராட்ட குணத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றீர்கள். உனது குறும்பான பக்கத்தை அறிவேன். உங்கள் பயணத்தில் நீங்கள் ஒவ்வொரு நபரையும், சவாலான சூழ்நிலையையும் தைரியத்துடன் எதிர்கொண்டீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி  எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய். உங்களுடன் பயணித்ததை நான் பெருமையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்! உனது ஆன்மா சாந்தியடையட்டும்.

இது மில்லரின் மகள் என சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள்தான் அனே என்றும் அவர் மில்லரின் தீவிரமான ரசிகர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தவர் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com