இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஆஸ்திரேலியாவில் தடுமாறப் போகும் இந்தியப் பந்துவீச்சாளர்: அக்ரம் கணிப்பு!

இரு பக்கமும் ஸ்விங் செய்யும் நல்ல பந்துவீச்சாளர் அவர். ஆனால் ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பந்துவீசுவதே சரியாக இருக்கும்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 9:37 am

DIN

ஆஸ்திரேலியாவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தடுமாற வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

புதிய பந்தில் புவனேஸ்வர் குமார் நன்றாகப் பந்துவீசுவார். அவரிடம் உள்ள வேகத்துடன் பந்து ஸ்விங் ஆகாத சூழலில் ஆஸ்திரேலியாவில் அவர் தடுமாற வாய்ப்புள்ளது. இரு பக்கமும் ஸ்விங் செய்யும் நல்ல பந்துவீச்சாளர் அவர். ஆனால் ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பந்துவீசுவதே சரியாக இருக்கும். காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக், வேகமாகப் பந்துவீசுகிறார். அவரை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் நான் இருந்திருந்தால், எல்லாத் தொடர்களுக்கும் உம்ரான் மாலிக்கைத் தேர்வு செய்வேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.