பயிற்சி ஆட்டம்: ஆஸி.க்கு எதிராக 186 ரன்கள் குவித்த இந்திய அணி!
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது இந்தியா. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், அஸ்வின் இடம்பெற்றுள்ளார்கள்.
கே.எல். ராகுல் 57, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்து இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவிக்க உதவினார்கள். ரோஹித் சர்மா 15, கோலி 19, பாண்டியா 2, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...