தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இந்திய அணியின் பேட்டிங்கில் திருப்தியா?: ரோஹித் சர்மா பதில்!

கடைசி ஓவர்களில் கூடுதலாக 10, 15 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

News image
Updated On :17 அக்டோபர் 2022, 10:51 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் கூடுதலாக 10, 15 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது இந்தியா. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், அஸ்வின் இடம்பெற்றார்கள்.

கே.எல். ராகுல் 57, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்து இந்திய அணி 20 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவிக்க உதவினார்கள். ரோஹித் சர்மா 15, கோலி 19, பாண்டியா 2, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, திடீரென கடைசி 6 விக்கெட்டுகளை 9 ரன்களுக்கு இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்து எதிர்பாராதவிதமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், 79 ரன்கள் எடுத்தார். 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் 5 ரன்களும் கடைசி ஓவரை வீசிய ஷமி 4 ரன்களும் மட்டும் கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தார்கள்.  

இந்திய அணியின் பேட்டிங் பற்றி கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ததாகவே நினைக்கிறேன். கடைசி ஓவர்களில் கூடுதலாக 10, 15 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அதைப் பற்றி தான் நாங்கள் தொடர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஆரம்பம் முதல் விளையாடும் பேட்டர், கடைசி வரை நீடிக்க வேண்டும். இன்று அதை ஓரளவு சூர்யகுமார் யாதவ் செய்தார். இன்று அருமையாக பேட்டிங் செய்து ரன்கள் எடுத்துள்ளோம். நல்ல ஆடுகளம். ஷாட்களைத் தைரியமாக அடிக்க முடிந்தது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.