கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸி. வீரர்: இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும்...
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆஸி. வீரர்: இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவாரா?

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி தோற்றது ஆஸ்திரேலிய அணி. அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது. வெள்ளியன்று இங்கிலாந்துடன் மோதுகிறது ஆஸ்திரேலிய அணி. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு அறிகுறிகள் லேசாக உள்ளதால் நாளைய ஆட்டத்தில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேத்யூ வேட் ஒருவேளை பங்கேற்காமல் போனால் டேவிட் வார்னர் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் எனத் தெரிகிறது. 

உலகக் கோப்பை விதிமுறைகளின்படி ஒரு வீரர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் ஆட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். அந்த வீரர் மைதானத்துக்குத் தனியாக வர வேண்டும். ஓய்வறையைப் பயன்படுத்தக் கூடாது. 

இதற்கு முன்பு சுழற்பந்து வீச்சாளர் ஸாம்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார். வலைப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிராக ஸாம்பா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com