தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இந்தியா தொடர்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவில் பங்கேற்கவுள்ள ஒருநாள் தொடருக்கான தெ.ஆ. அணியும் இன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தெ.ஆ. அணி

Updated On :6 செப்டம்பர் 2022, 11:53 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

டி20 தொடர் செப்டம்பர் 28-ல் ஆரம்பித்து அக்டோபர் 4-ல் முடிவடையவுள்ளது. ஒருநாள் தொடர் அக்டோபர் 6-ல் ஆரம்பித்து அக்டோபர் 11-ல் முடிவடையவுள்ளது. இதற்குப் பிறகு இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளன.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பவுமா தலைமையிலான அணியில் காயம் காரணமாகப் பிரபல வீரர் வான் டர் டுசென் இடம்பெறவில்லை. இதே அணி, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

இந்தியாவில் பங்கேற்கவுள்ள ஒருநாள் தொடருக்கான தெ.ஆ. அணியும் இன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெ.ஆ. ஒருநாள் அணி 

பவுமா (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மஹாராஜ், மலான், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, நோர்கியா, பார்னெல், பெக்லுக்வாயோ, டுவென் பிரிடோரியஸ், ரபாடா, ஷம்சி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.