நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்று ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்று ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. ஸ்டீஸ் ஸ்மித் 61 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இந்த இலக்கை நியூசிலாந்து அணி எளிதாக விரட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி, 33 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆடம் ஸாம்பா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் 2 விக்கெட்டுகளும் எடுத்த மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
3-வது ஒருநாள் ஆட்டம் செப்டம்பர் 11 அன்று நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...