தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி. ஆலி ராபின்சன் ஆட்டநாயகன், பென் ஸ்டோக்ஸ் தொடா் நாயகன் விருது பெற்றனா்.
முன்னதாக, கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய இந்த 3-ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்கா 118 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மாா்கோ யான்சென் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து பௌலிங்கில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 158 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ஆலி போப் அதிகபட்சமாக 13 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் அடித்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் மாா்கோ யான்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
அடுத்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா 169 ரன்கள் சோ்த்தது. கேப்டன் டீன் எல்கா் அதிகபட்சமாக 6 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தாா். இங்கிலாந்து பௌலா்களில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
இறுதியாக 130 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இங்கிலாந்து, திங்கள்கிழமை 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது. ஜாக் கிராலி 12 பவுண்டரிகளுடன் 69, ஆலி போப் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலா் ககிசோ ரபாடா, அலெக்ஸ் லீஸ் விக்கெட்டை சாய்த்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திராவிட மாடலை நாடு முழுவதும் பின்பற்றினால் இந்தியா இன்னும் விரைவாக வளரும்! - முதல்வர்
மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
ஓடிடியில் வெளியான மை லார்ட்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

