நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ருதுராஜ் சதம்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்துள்ளார்.
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக ருதுராஜ் சதம்

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்துள்ளார்.

நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் டிரா ஆனது. 3-வது ஆட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெயிக்வாட், இன்று அபாரமாக விளையாடி சதமடித்தார். 127 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். உபேந்திர யாதவ் 76 ரன்கள் எடுத்தார்.

இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசி. ஏ அணியின் மேத்யூ ஃபிஷர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com