இங்கிலாந்தில் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி: அறிவிப்பு

இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இரு டி20  பயிற்சி ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்திய அணி: அறிவிப்பு

இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இரு டி20  பயிற்சி ஆட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமான ரத்தான 5-வது டெஸ்டை இரு அணிகளும் இம்முறை விளையாடுகின்றன. ரத்தான 5-வது டெஸ்ட் ஜூலை 1 அன்று எக்பாஸ்டனில் தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இந்தியா - இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 7-ல் தொடங்கி ஜுலை 10 அன்று நிறைவுபெறுகிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12-ல் தொடங்கி ஜூலை 17 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் ஜூலை 1, ஜூலை 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு டி20 பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த இரு டி20 பயிற்சி ஆட்டங்களும் 5-வது டெஸ்ட் நடைபெறும் தினங்களில் நடைபெறவுள்ளன. இதனால் டெஸ்டில் இடம்பெறாத இந்திய வீரர்கள் இந்த இரு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடவுள்ளார்கள். 

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இந்தியாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. சென்னையில் ஜூன் 9 அன்று தொடங்கும் டி20 தொடர் ஜூன் 19 அன்று தில்லியில் நிறைவுபெறுகிறது. அதன்பிறகு அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஜூன் 26, ஜூன் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்துக்கு எதிராக இரு டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com