சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார் இந்திய வீரர் குகேஷ்.
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய பி அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. இந்திய ஏ அணி 6-ம் இடத்திலும் இந்திய சி அணி 9-ம் இடத்திலும் உள்ளன.
ஓபன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பி வீரர் குகேஷ் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். ஒலிம்பியாடில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் வேறு யாரும் 100% வெற்றிகளை அடையவில்லை. இதனால் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 16 வயது குகேஷ், தன்னிகரற்ற நட்சத்திரமாக உள்ளார். உலக நெ.1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் கூட ஒலிம்பியாடில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று 1 ஆட்டத்தை டிரா செய்துள்ளார். அவருக்குக் கூட 100% வெற்றி கிடைக்கவில்லை. இதனால் குகேஷின் புகழ் மேலும் அதிகரித்துள்ளது. அவருடைய அடுத்த ஆட்டங்களின் முடிவுகளை அறிந்துகொள்ள செஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் செஸ் வீரர்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
சென்னை செஸ் ஒலிம்பியாட்: அதிக வெற்றிகளை அடைந்த இந்திய வீரர்கள்
குகேஷ் - 6/6
சேதுராமன் - 4/6
சரின் நிஹல் - 3/5
அதிபன் - 3/4
ருனாக் சத்வனி - 3/5
ஹரிகிருஷ்ணா - 3/5
அர்ஜுன் - 3/6
அபிஜீத் குப்தா - 3/5
அபிமன்யூ - 3/4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 27 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு வெற்றி!

தைரியம் அதிகரிக்கும் மிதுன ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 27)
இன்றைய ராசி பலன் (27.05.2026) - ரிஷபம்
திருச்சியில் சட்டவிரோத மதுவிற்பனை: பெரம்பலூரைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



