பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

தமிழகத்தின் 16 வயது குகேஷ்: இந்தியாவின் நெ.3 செஸ் வீரர்!

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நெ.3 வீரராக முன்னேற்றம் அடைந்துள்ளார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 2:50 pm IST

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நெ.3 வீரராக முன்னேற்றம் அடைந்துள்ளார்.

செஸ் தரவரிசையில் 2700 புள்ளிகளைக் குறைந்த வயதில் அடைந்த இந்திய வீரர் என்கிற பெருமையைச் சமீபத்தில் அடைந்தார் 16 வயது குகேஷ். உலகளவில் 3-வது இளம் வீரர். 2019-ல் இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் (12 வயது) என்கிற சாதனையைப் படைத்தார் குகேஷ். உலகளவில் 2-வது இடம். 2700 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த குகேஷுக்குப் பிரபல செஸ் வீரர்களான கார்ல்சனும் விஸ்வநாதன் ஆனந்தும் பாராட்டு தெரிவித்தார்கள்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருடைய ஈஎல்ஓ தரவரிசை 2714 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவின் நெ.3 வீரராக இருந்த விதித் குஜ்ராத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் புதிய நெ.3 வீரராக முன்னேறியுள்ளார் குகேஷ். உலகளவில் 11 இடங்கள் முன்னேறி 27-ம் இடத்தில் உள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் (2756) உலகளவில் 13-ம் இடத்திலும் மற்றொரு இந்திய வீரரும் ஆந்திராவைச் சேர்ந்தவருமான ஹரிகிருஷ்ணா (2724) 24-ம் இடத்திலும் உள்ளார்கள். கடந்த 5 வருடங்களில் முதல்முறையாக இந்தியாவின் சிறந்த மூன்று வீரர்களில் ஆனந்த், ஹரி கிருஷ்ணா, விதித் ஆகிய மூவரைத் தவிர மற்றொருவர் இடம்பெற்றுள்ளார். 

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்றைய 5-வது சுற்றில் முன்னாள் உலக நெ.2 வீரர் அலெக்ஸி ஷிரோவை வீழ்த்தினார் குகேஷ். இதன்மூலம் அவர் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 

இந்தியா பி வீரர்களுடன் குகேஷ்

இந்தியா பி வீரர்களுடன் குகேஷ்

Related Article

சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: அறிவிப்பு

டிக்கெட் விற்பனை: ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட்

ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, பிரபல வீரர் நீக்கம்!

காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்

சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்: 3-வது டி20யில் இந்தியா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.