கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜிம்பாப்வே முதல் ஒருநாள்: இந்தியா முதலில் பந்துவீச்சு

ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.

News image
இந்திய அணி வீரர் தவன் (கோப்புப் படம்)
Updated On :18 ஆகஸ்ட் 2022, 7:36 am

DIN

ஜிம்பாப்பேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.

இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இன்று ( ஆகஸ்ட் 18) தொடங்கும் ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 22-ல் நிறைவடைகிறது. சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் ஜிம்பாப்வே ஜெயித்திருந்தது. 

ஹராரேவில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கே.எல். ராகுல், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சிராஜ் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய அணி: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவன்,ஷுப்மன் கில், இஷான் கிஷன்,தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், தீபக் சஹார், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சிராஜ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.