மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

தெ.ஆ. அபார பந்துவீச்சு: முதல் நாளில் தடுமாறிய இங்கிலாந்து (ஹைலைட்ஸ் விடியோ)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

Published On :

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். போப் மட்டும் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். 

மழை காரணமாக முதல் நாளன்று 32 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் யான்சென் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.