தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகல்!

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து பிரபல வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார். 

Published On :

ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து பிரபல வீரர் ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார். 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் காயம் காரணமாக ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார். இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடியபோது ஷாஹீன் அப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் இன்னும் குணமாகாததால் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் மட்டுமல்லாமல் இங்கிலாந்துத் தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். இதற்கடுத்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.