மீண்டும் அதிரடியாக சதமடித்த புஜாரா!
By DIN | Published On : 23rd August 2022 07:52 PM | Last Updated : 23rd August 2022 08:07 PM | அ+அ அ- |

ராயல் லண்டன் கோப்பையில் அதிரடியாக 75 பந்துகளில் சதமடித்து விளாசினார் புஜாரா.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் (லிஸ்ட் ஏ) போட்டியில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா சசெக்ஸ் அணிக்காக விளையாடி வெருகிறார்.
டெஸ்ட்டுக்கு பெயர்போன புஜார இப்படி ஆடுவது இந்திய மட்டுமல்ல இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 75 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். பின்பு 90வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து 132 ரன்னில் அவுட் ஆனார். சசெக்ஸ் அணி 50 ஓவரில் 400 ரன்கள் எடுத்தது. மிடில்செக்ஸ் அணிக்கு 401 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் 1094 ரன்களை அடித்தார். சராசரி 109.40 ஆகும். ராயல் லண்டன் கோப்பை போட்டியில் இதுவரை 614 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 102.3. ஸ்டிரைக் ரேட் 116.28 என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 3 சதங்கள், 2 அரை சதங்கள் அடங்கும்.