உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய் காலிறுதிக்குத் தகுதி

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார். 
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய் காலிறுதிக்குத் தகுதி
Published on
Updated on
1 min read

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்களான பிரணாய் - லக்‌ஷயா சென் ஆகிய இருவரும் மோதினார்கள். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 21-17, 16-21, 17-21 என வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளார் பிரணாய். இருவரும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதி இருவரும் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள். கடைசியாக விளையாடிய இரு ஆட்டங்களிலும் பிரணாய் வென்றுள்ளார்.  

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.