தங்கம் வென்ற லின்தோய்  சனம்பம்
தங்கம் வென்ற லின்தோய்  சனம்பம்

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று லின்தோய் வரலாற்று சாதனை! 

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லின்தோய்  சனம்பம் முதன்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
Published on

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லின்தோய்  சனம்பம் முதன்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

சராஜூவோவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த 15வயது வீரங்கனை லின்தோய் சனம்பம். 

57கிலோ எடைப்பிரிவில் பிரேசிலை சேர்ந்த பியன்கா ரெய்ஸை 1-0 என்ற கணக்கில் வென்று இந்தியாவில் முதன்முறையாக ஜூடோ போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஜூனியர் சீனியர் என்ற பிரிவிலும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லின்தோய் சனம்பம் 2018இல் தேசிய அளவில் சப்-ஜூனியர் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றார். 2021 நவம்பர் சண்டீகரில் நேஷ்னல் சாம்பிய்ன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து ஜூலை 2022இல் ஆசிய ஜீனியர் ஜூடோ போட்டியில் தங்கம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து லின்தோய் கூறியதாவது:

இந்த வெற்றியை என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com