தெற்கு மண்டல அணிக்குத் தேர்வான இரு தமிழக வீரர்கள்

துலீப் கோப்பைப் போட்டிக்கான தெற்கு மண்டல அணியில் இரு தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.
பாபா இந்திரஜித்
பாபா இந்திரஜித்

துலீப் கோப்பைப் போட்டிக்கான தெற்கு மண்டல அணியில் இரு தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.

2022-23 துலீப் கோப்பைப் போட்டிக்கான தெற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமா விஹாரி தலைமையிலான அணியில் இந்திரஜித், சாய் கிஷோர் என இரு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 2021-22 ரஞ்சி கோப்பைப் போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடிய தமிழ்நாடு, ஒரு வெற்றியையும் பெறவில்லை. இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. தமிழக வீரர் ஷாருக் கான் மாற்று வீரராகத் தேர்வாகியுள்ளார். 

தெற்கு மண்டல அணி: ஹனுமா விஹாரி (கேப்டன்) மயங்க் அகர்வால் (துணை கேப்டன்), ரோஹன் குண்ணும்மல், தேவ்தத் படிக்கல், மனிஷ் பாண்டே, பாபா இந்திரஜித், ஏக்நாத் கேர்கர், ரிக்கி புய், சாய் கிஷோர், கே. கெளதம், பசில் தம்பி, ரவி தேஜா, வி. சி. ஸ்டீபன், தனய் தியாகராஜன், லக்‌ஷய் கர்க். 

மாற்று வீரர்கள்: கே.வி. சித்தார்த் (கர்நாடகம்), சச்சின் பேபி (கேரளம்), எம். ஷாருக் கான் (தமிழ்நாடு), எஸ். உதேஷி (புதுச்சேரி), தன்மய் அகர்வால் (ஹைதராபாத்). 

தென் மண்டல அணியில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பங்களிப்பு

கர்நாடகம் - மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல், கே. கெளதம்
ஹைதராபாத் - விஹாரி, ரவி தேஜா, தனய் தியாகராஜன்
ஆந்திரா - ரிக்கி புய், வி. சி. ஸ்டீபன்
கேரளம் - ரோஹன் குண்ணும்மல், பசில் தம்பி
கோவா - ஏக்நாத் கேர்கர், லக்‌ஷய் கர்க்
தமிழ்நாடு - பாபா இந்திரஜித், சாய் கிஷோர்

செப்டம்பர் 8 முதல் 25 வரை தமிழ்நாட்டில் துலீப் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com