ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்களின் பட்டியல்

ஷாருக் கான், சாய் கிஷோர், எம். அஸ்வின் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய...
ஷாருக் கான்
ஷாருக் கான்

இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் 30 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். தமிழக அணி இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியை வென்றதோடு விஜய் ஹசாரே ஒருநாள் போட்டியில் 2-ம் இடம் பிடித்தது. இதனால் இந்த வருட ஏலத்தில் தமிழக வீரர்கள் அதிக அளவில் தேர்வாக வாய்ப்புள்ளதாக அறியப்பட்டது.

அதேபோல ஷாருக் கான், சாய் கிஷோர், எம். அஸ்வின் போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ஐபிஎல் அணிகள் மிகவும் ஆர்வம் காண்பித்தன. ஏலத்துக்கு முன்பு, தமிழகச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை ரூ. 8 கோடிக்குத் தக்கவைத்துக்கொண்டது கொல்கத்தா அணி. எனவே இந்த வருட ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

ஐபிஎல் 2022 ஏலத்தில் பங்கேற்ற தமிழக வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - அடிப்படை விலை  ரூ. 2 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் - ரூ. 1.50 கோடி
3. தினேஷ் கார்த்திக் - ரூ. 2 கோடி
4. டி. நடராஜன் - ரூ. 1 கோடி
5. ஷாருக் கான் - ரூ. 40 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
8. என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்
9. முருகன் அஸ்வின் - ரூ. 20 லட்சம்
10. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம்
11. விஜய் சங்கர் - ரூ. 50 லட்சம்
12. ஜி. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
13. சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
14. சந்தீப் வாரியர் - ரூ. 20 லட்சம் 
15. சாய் சுதர்சன் - ரூ. 20 லட்சம்
16. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம் 
17. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம் 
18. அருண் கார்த்திக் - ரூ. 40 லட்சம் 
19. ஆர். சிலம்பரசன் - ரூ. 20 லட்சம் 
20. அலெக்ஸாண்டர் - ரூ. 20 லட்சம்
21. எஸ். கிஷன் குமார் - ரூ. 20 லட்சம்
22. முரளி விஜய் - ரூ. 50 லட்சம்
23. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம் 
24. சோனு யாதவ் - ரூ. 20 லட்சம்
25. அதிசயராஜ் - ரூ. 20 லட்சம் 
26. வி. கெளதம் - ரூ. 20 லட்சம் 
27. எம். முஹமது - ரூ. 20 லட்சம் 
28. பிரதோஷ் பால் - ரூ. 20 லட்சம்
29. ஜெ. கெளசிக் - ரூ. 20 லட்சம்
30. நிதிஷ் ராஜகோபால் - ரூ. 20 லட்சம் 

ஐபிஎல் ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்

சாய் கிஷோர்
சாய் கிஷோர்

1. ஷாருக் கான் (பஞ்சாப்) - ரூ. 9 கோடி
2. வாஷிங்டன் சுந்தர் (சன்ரைசர்ஸ்) - ரூ. 8.75 கோடி
3. தினேஷ் கார்த்திக் (ஆர்சிபி) - ரூ. 5.50 கோடி
4. ஆர். அஸ்வின் (ராஜஸ்தான்) - ரூ. 5 கோடி
5. நடராஜன் (சன்ரைசர்ஸ்) - ரூ. 4 கோடி
6. சாய் கிஷோர் (குஜராத்) - ரூ. 3 கோடி
7. எம். அஸ்வின் (மும்பை) - ரூ. 1.60 கோடி
8. விஜய் சங்கர் (குஜராத்) - ரூ. 1.40 கோடி
9. சஞ்சய் யாதவ் (மும்பை) - ரூ. 50 லட்சம்
10. பாபா இந்திரஜித் (கேகேஆர்) - ரூ. 20 லட்சம்
11. என். ஜெகதீசன் (சிஎஸ்கே) - ரூ. 20 லட்சம்
12. ஹரி நிஷாந்த் (சிஎஸ்கே) - ரூ. 20 லட்சம் 
13. சாய் சுதர்சன் (குஜராத்) - ரூ. 20 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com