ஊடகங்கள் அமைதி காத்தால் எல்லாம் சரியாக நடக்கும்: விராட் கோலி பேட்டிங் பற்றி ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 8,18,0 என மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி.
ஊடகங்கள் அமைதி காத்தால் எல்லாம் சரியாக நடக்கும்: விராட் கோலி பேட்டிங் பற்றி ரோஹித் சர்மா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 8,18,0 என மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 51, 0, 65 என நன்றாக விளையாடியவர் இம்முறை சொதப்பிவிட்டார்.

ஏற்கெனவே இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கடந்த 68 இன்னிங்ஸிலும் விராட் கோலி ஒரு சதமும் அடிக்காமல் இருப்பது பெரிய ஏமாற்றமாக உள்ளது. (கடைசியாக, 2019 நவம்பர் 23 அன்று வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 136 ரன்கள் எடுத்தார் கோலி. அது அவருடைய 70-வது சதம். விராட் கோலி களமிறங்கினாலே சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு இப்போது மாறிவிட்டது. ஒரு சதமாவது அடித்தால் நல்லது என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.) சமீபகாலமாக தனது கேப்டன் பதவிகளைத் துறந்தார். இப்போது பேட்டிங்கிலும் ஏமாற்றம் அளித்து வருகிறார். 

விராட் கோலி மீண்டும் நன்றாக விளையாடுவதற்கு கேப்டனும் பயிற்சியாளரும் என்னவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்கிற கேள்வி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு, செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:

ஊடகங்களில் இருந்து இதைத் தொடங்கவேண்டும். சிறிதுகாலம் ஊடகங்கள் இதைப் பற்றி பேசுவதை நிறுத்தினால் எல்லாம் சரியாக நடக்கும்.

10 வருடங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலி விளையாடி வருகிறார். அழுத்தமான தருணங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். எனவே நீங்கள் அமைதியாக இருந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com