ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரஞ்சியில் பாண்டியா விளையாடாதது ஏன்? சேத்தன் சர்மா

ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2022, 2:59 pm

DIN


ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும் என அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

ரஞ்சி கோப்பையில் ஹார்திக் பாண்டியா விளையாடாதது குறித்து அவர் பேசியதாவது:

"யாருக்கேனும் விளையாட விருப்பமில்லையென்றால், அதில் தேர்வுக் குழு தலையிட முடியாது. ஹார்திக் பாண்டியா ரஞ்சி கோப்பையில் விளையாடாதது ஏன் என்பது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்? ரஞ்சி கோப்பையில் யார் விளையாடுகிறார்கள், யார் செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் கவனிக்கிறோம். வீரர்கள் ரஞ்சியில் விளையாடுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது."

ஹார்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்வது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:

"ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக இருந்தார். ஆனால், காயங்களுக்குப் பிறகு 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருந்தால், பந்துவீசவும் செய்தால், அவரை உடனடியாகக் கருத்தில் கொள்வோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.