
மேற்கிந்தியத் தீவுகளின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தேர்வாகியுள்ளார்.
65 வயது ஹெய்ன்ஸ், மே.இ. தீவுகள் அணிக்காக 1978 முதல் 1994 வரை 116 டெஸ்டுகள், 238 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 18 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 17 சதங்களும் அடித்து 80களில் பிரபல வீரராகத் திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 15,000க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.
மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ரோஜர் ஹார்ப்பரின் ஒப்பந்தம் கடந்த வருடத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், புதிய தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜூன் 2024 வரை அப்பதவியில் நீடித்து இரு டி20 உலகக் கோப்பைகள், ஒரு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு மே.இ. தீவுகள் அணியைத் தேர்வு செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேப்டன் கே.எல். ராகுல் செய்த தவறு: கவாஸ்கர் விமர்சனம்
ஆஷஸ் 4-வது டெஸ்ட்: பேர்ஸ்டோ சதம், இங்கிலாந்து 258/7
புதிய விதிமுறையை உருவாக்க வேண்டுமா?: பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக சச்சின் கருத்து
அணிகளுக்கு நெருக்கடி: டி20 கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்திய ஐசிசி
உலகக் கோப்பைக்குத் தேர்வாகாதது வேதனையளிக்கிறது: இந்திய வீராங்கனை பதிவு
ரிஷப் பந்துக்கு என்னவிதமான அறிவுரை கூறப்படும்?: ராகுல் டிராவிட் பதில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.