வெங்கடேஷ் ஐயர் பந்துவீசாதது ஏன்?: ஷிகர் தவன் பதில்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் பந்துவீசாததற்கு தொடக்க வீரர் ஷிகர் தவன் விளக்கம் அளித்துள்ளார்.
வெங்கடேஷ் ஐயர் பந்துவீசாதது ஏன்?: ஷிகர் தவன் பதில்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் பந்துவீசாததற்கு தொடக்க வீரர் ஷிகர் தவன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாா்ல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் அடித்தது. பவுமா 110, வான் டொ் டுசென் 129* ரன்கள் எடுத்தார்கள். பின்னா் ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்களே அடித்தது. தவன் 79, கோலி 51 ரன்கள் எடுத்தார்கள். வான் டொ் டுசென் ஆட்டநாயகன் ஆனாா்.

ஆல்ரவுண்டராக இந்திய அணிக்குத் தேர்வான வெங்கடேஷ் ஐயர், முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஒரு ஓவரும் வீசவில்லை. இதனால் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இதுபற்றி தொடக்க வீரர் ஷிகர் தவன் விளக்கம் அளித்ததாவது:

வெங்கடேஷ் ஐயர் பந்துவீசுவதற்கான நிலைமை உருவாகவில்லை. ஆடுகளம் ஓரளவு சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களும் நன்குப் பந்துவீசினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் கடைசியில் பயன்படுத்தப்படுவார்கள். நடு ஓவர்களில் விக்கெட்டுகள் விழாதபோது முக்கியப் பந்துவீச்சாளர்களைப் பந்துவீச செய்து விக்கெட் எடுக்கப் பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை. கடைசி ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com