இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது மே.இ. தீவுகள் அணி

கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஹோல்டர்.
ஹோல்டர் (கோப்புப் படம்)
ஹோல்டர் (கோப்புப் படம்)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தை வென்று டி20 தொடரை 3-2 எனக் கைப்பற்றிய மே.இ. தீவுகள் அணி.

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் முடிவடைந்துள்ளது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது.

4 டி20 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமனில் இருந்தன. கடைசி டி20 ஆட்டம் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் பொலார்ட் 25 பந்துகளில் 41 ரன்களும் ரோவ்மன் பவல் 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்களும் எடுத்தார்கள். கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் கிடைத்தன. 

மொயீன் அலி தலைமையில் விளையாடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டி20 தொடரை 3-2 என வென்றது மே.இ. தீவுகள் அணி. ஹாட்ரிக் உள்பட 5 விக்கெட்டுகளை ஹோல்டரும் அகேல் ஹுசைன் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் ஹோல்டர். இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் வின்ஸ் 55 ரன்களும் சாம் பில்லிங்ஸ் 41 ரன்களும் எடுத்தார்கள். 

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஹோல்டர் வென்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com