ஆசிய விளையாட்டுப் போட்டி எப்போது நடைபெறும்?: அதிகாரபூர்வ அறிவிப்பு
By DIN | Published On : 19th July 2022 05:01 PM | Last Updated : 19th July 2022 05:01 PM | அ+அ அ- |

இந்தியாவின் மீரா பாய் சானு
2022 ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற இருந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்த வருடம் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023-ம் வருடம் சீனாவின் ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி முடிந்த அடுத்த 10 மாதங்களில் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி, 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்றது.