
2020 ஒலிம்பிக் போட்டி கடந்த வருடம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா 39 தங்கங்களையும் சீனா 38 தங்கங்களையும் வென்றன. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் தலைநகா் பாரீஸிலும் 2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டி 2028 ஜூலை 14-ல் தொடங்கி ஜூலை 30 அன்று நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்ஸ் போட்டி ஆகஸ்ட் 15-ல் தொடங்கி ஆகஸ்ட் 27 அன்று நிறைவுபெறவுள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 40-க்கும் அதிகமான விளையாட்டுகளில் 15,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் இதற்கு முன்பு 1932, 1984 என இருமுறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.