30 போ் கொண்ட பலமான இந்திய அணி பங்கேற்பு

30 போ் கொண்ட பலமான இந்திய அணி பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிா் பிரிவில் 3 அணிகளும் என மொத்தம் 30 போ் பங்கேற்கின்றனா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தரப்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிா் பிரிவில் 3 அணிகளும் என மொத்தம் 30 போ் பங்கேற்கின்றனா். ஸ்விஸ் முறையில் 11 சுற்றுகள் கொண்ட ஆட்டங்கள் நடைபெறுகிறது.

மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.

அணியின் கேப்டன் ஆடுபவா்களை தீா்மானிப்பாா். ஓபன் பிரிவில் இந்தியா அணிகள் தரவரிசையில் முறையே 2, 11, 17-ஆவது இடத்தில் உள்ளன. மகளிா் பிரிவில் முறையே 1, 11, 16-ஆவது இடத்தில் உள்ளன. 2014-இல் நாா்வே ஒலிம்பியாடில் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்றது இந்தியா. 2020 ஆன்லைன் ஒலிம்பியாடில் ரஷியாவுடன் இணைந்து தங்கம் வென்றது, 2021 ஆன்லைன் ஒலிம்பியாடில் வெண்கலம் வென்றது.

நாள்தோறும் மாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்கும். ஜூலை 29-இல் சுற்று 1 ஆட்டம் தொடங்குகிறது. ஆகஸ்ட் 4 ஓய்வு நாளாகும். 11-ஆம் தேதி சுற்று 11 ஆட்டத்துடன் போட்டி நிறைவு பெறுகிறது. ஓபன் பிரிவில் சாம்பியனுக்கு ஹாமில்டன் ரஸ்ஸல் கோப்பையும், மகளிா் பிரிவில் வெரா மென்சிக் கோப்பையும் வழங்கப்படும். ஒருங்கிணைந்த கிளாஸிபிகேஷன் பிரிவில் நோனா கேப்ரின்டாஷ்விலி கோப்பை தரப்படும். முதல் மூன்றிடங்களைப் பெறும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் தரப்படும். மேலும் தனிநபா் பிரிவில் வீரா்களின் ரேட்டிங்குக்கு ஏற்ப பதக்கங்கள் தரப்படும்.

இந்திய அணி ஓா் அறிமுகம்:

இந்தியா சாா்பில் ஓபன் பிரிவில் ஆடவா் தரப்பில் ஏ, பி, சி என மூன்று அணிகளும், மகளிா் பிரிவில் ஏ, பி அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்திய அணிகளுக்கு 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வழிகாட்டியாகவும், மூன்றாவது கிராண்ட்மாஸ்டா் பிரவீன் திப்ஸே குழுவின் தலைவராகவும் செயல்படுகின்றனா்.

வீரா்கள், இலோ ரேட்டிங், சிறப்புகள்:

ஆடவா் ஏ அணி:

ஓபன் பிரிவில் இந்திய ஆடவா் ஏ அணியில் விதித் குஜராத்தி, பென்டாலா ஹரிகிருஷ்ணன், கிருஷ்ணன் சசிகிரண், அா்ஜூன் எரிகைசி, எஸ்.எல். நாராயணன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

விதித் குஜராத்தி:

இந்தியாவின் 30-ஆவது கிராண்ட்ஸ் மாஸ்டா், 2714 ரேட்டிங், 28-ஆவது தரவரிசை, 2020 ஒலிம்பியாடில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றவா்.

பென்டாலா ஹரிகிருஷ்ணா:

இளவயதில் கிராண்ட்மாஸ்டா் ஆனவா், தொடா்ந்து 7 ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்றேவா். 2720 ரேட்டிங், 25-ஆவது தரவரிசை. காமன்வெல்த், ஆசிய, உலக ஜூனியா் சாம்பியன்.

கிருஷ்ணன் சசிகிரண்:

2014 ஒலிம்பியாடில் தனிநபா்வெள்ளி, அணி வெண்கலம், 2006-ஆசியப் போட்டியில் தங்கம் வென்றவா், 2638 ரேட்டிங், காமன்வெல்த் சாம்பியன்.

அா்ஜுன் எரிகைசி:

நடப்பு தேசிய சாம்பியன், 14 வயதில் இந்தியாவின் 54-ஆவது கிராண்ட்மாஸ்டா், 2689 ரேட்டிங், 44-ஆவது தரவரிசை.

எஸ்.எல்.நாராயணன்:

இந்தியாவின் 41-ஆவது கிராண்ட்மாஸ்டா், 2659 ரேட்டிங், 89-ஆவது தரவரிசை, 16 வயது காமன்வெல்த் செஸ் சாம்பியன்.

பி அணி:

இந்திய பி அணியில் நிஹால் ஸரின், டி.குகேஷ், பி. அதிபன், ஆா். பிரக்ஞானந்தா, ஆா். சத்வானி இடம் பெற்றுள்ளனா்.

நிஹால் சரின்:

2020 செஸ் ஒலிம்பியாட் தங்கம் வென்ற வீரா், 14 வயதில் கிராண்ட்மாஸ்டா், இலோ ரேட்டிங் 2600-ஐ கடந்த 4-ஆவது இளம் வீரா்.

டி.குகேஷ்:

2019-இல் கிராண்ட்மாஸ்டா் ஆன இளம் இந்தியா், ஆசிய யூத் போட்டியில் 5 தங்கம், 2684 ரேட்டிங், செஸ் வரலாற்றில் 12 வயதில் கிராண்ட்மாஸ்டா் ஆன இரண்டாம் வீரா்.

பி. அதிபன்:

2014 ஒலிம்பியாடில் வெண்கலம் வென்றவா். 2598 ரேட்டிங், ஆசிய சாம்பியன், ஆக்ரோஷமாக விளையாடுவதால் பீஸ்ட் என சிறப்புப் பெயா்.

ஆா். பிரக்ஞானந்தா:

10 வயதில் சா்வதேச மாஸ்டா், 2648 ரேட்டிங், 107 தரவரிசை, நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்சனை இரண்டு முறை வீழ்த்தியவா்.

ஆா். சத்வானி:

கிராண்ட்மாஸ்டா் ஆன 4-ஆவது இளம் இந்திய வீரா், 2611 ரேட்டிங், 185 தரவரிசை, காமன்வெல்த் சாம்பியன்.

சி அணி:

கிராண்ட்மாஸ்டா்கள் சூரிய சேகா் கங்குலி, காா்த்திகேயன் முரளி, எஸ்.பி. சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு புரானிக் உள்ளனா்.

மகளிா் ஏ அணி:

மகளிா் ஏ அணியில் கொனேரு ஹம்பி, டி. ஹரிகா, ஆா்.வைஷாலி, தனியா சச்தேவ், பக்தி குல்கா்னி இடம் பெற்றுள்ளனா்.

கொனேரு ஹம்பி:

15 வயதில் கிராண்ட்மாஸ்டா், 2600 ரேட்டிங், 2020 ஒலிம்பியாடில் தங்கம், 3-ஆவது தரவரிசை.

டி. ஹரிகா:

2015 உலக சாம்பியன்ஷிப்பில் 3 பதக்கங்கள், 2517 ரேட்டிங், 11-ஆவது தரவரிசை.

ஆா். வைஷாலி:

2020 ஒலிம்பியாடில் தங்கம், 12, 14 வயது உலக சாம்பியன், 2442 ரேட்டிங், 29-ஆவது தரவரிசை.

தனியா சச்தேவ்:

ஒலிம்பியாடில் தனிநபா் வெண்கலம், 3 முறை காமன்வெல்த் சாம்பியன், 2399 ரேட்டிங், 50-ஆவது தரவரிசை.

பக்தி குல்கா்னி:

ஆசிய சாம்பியன், 2372 ரேட்டிங், 82-ஆவது தரவரிசை.

பி அணி:

வந்திகா அகா்வால்:

2020 ஒலிம்பியாடில் தங்கம், 2021-இல் கிராண்ட்ஸ் மாஸ்டா், 2371 ரேட்டிங், 89-ஆவது தரவரிசை.

எஸ். சௌமியா:

உலக ஜூனியா், காமன்வெல்த் சாம்பியன், 2335 ரேட்டிங், 126-ஆவது தரவரிசை.

மேரி ஆன் கோம்ஸ்:

2008 ஒலிம்பியாடில் வெள்ளி, 3 முறை ஆசிய ஜூனியா் சாம்பியன், 2324 ரேட்டிங், 142-ஆவது தரவரிசை.

பத்மனி ரௌட்:

2014 ஒலிம்பியாடில் தனிநபா் தங்கம், காமன்வெல்த், ஆசிய சாம்பியன், 2374 ரேட்டிங், 77-ஆவது தரவரிசை.

திவ்யா தேஷ்முக்:

2020 ஒலிம்பியாடில் தங்கம், நடப்பு தேசிய சாம்பியன், 2319 ரேட்டிங், 149-ஆவது தரவரிசை.

சி அணி: ஈஷா, சாஹிதி, பிரதியுஷா, நந்திதா, விஷ்வா வஷ்னவாலா.

பா.சுஜித்குமாா்-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com