நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது அந்த அணி.
கடைசி டெஸ்டில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 117.3 ஓவர்களில் 329 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து பெளலிங்கில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 67 ஓவர்களில் 360 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 162 ரன்கள் விளாச, நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 105.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. டாம் பிளண்டெல் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்தின் ஜேக் லீச் மீண்டும் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியாக 296 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 54.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு அந்த ரன்களை எட்டியது. ஆலி போப் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் 86, ஜானி பேர்ஸ்டோ 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.நியூஸிலாந்தின் டிம் செளதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


