மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வார்னே குறித்த விமர்சனம்: வருத்தம் தெரிவித்தார் கவாஸ்கர்

வார்னே குறித்த தனது விமர்சனத்தைத் தவறான நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக சுநீல் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 மார்ச் 2022, 9:29 am

DIN

வார்னே குறித்த தனது விமர்சனத்தைத் தவறான நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளதாக சுநீல் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் வார்னே, சமீபத்தில் தாய்லாந்துக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் வீரர் கவாஸ்கர், வார்னேவை மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கூற மாட்டேன். இந்தியாவுக்கு எதிராக வார்னே சிறப்பாகப் பந்துவீசவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஒருமுறை மட்டுமே 5 விக்கெட்டுகளை எடுத்தார். இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களும் முரளிதரனும் வார்னேவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். இந்தியாவுக்கு எதிராக முரளிதரன் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். வார்னேவை விட முரளிதரனைச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் எனக் கூறுவேன் என்றார்.

வார்னே இறந்து ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் இச்சமயத்தில் வார்னேவை இதுபோன்று கவாஸ்கர் விமர்சனம் செய்ததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் கவாஸ்கர். தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள காணொளியில் கூறியதாவது:

தொலைக்காட்சிப் பேட்டியில், வார்னே மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரா எனக் கேட்டார்கள். அதற்கு என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கூறினேன். அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவும் கூடாது, அதற்குப் பதில் அளித்திருக்கவும் கூடாது. யாரையும் யாருடனும் ஒப்பிட்டு மதிப்பிடுவதற்கான நேரம் இல்லை இது. கிரிக்கெட்டை விளையாடிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் வார்னேவும் ஒருவர். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.