மகளிர் தினம்: சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்த காணொளி
By DIN | Published On : 08th March 2022 01:50 PM | Last Updated : 08th March 2022 01:50 PM | அ+அ அ- |

மகளிர் தினத்தை முன்னிட்டு காணொளி ஒன்றைப் பகிர்ந்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மகளிர் தினத்துக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் கிரிக்கெட், கூடைப்பந்து விளையாட்டுகளில் ஈடுபடும் வீராங்கனைகளுக்கு அவர் யோசனைகள் வழங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மகளிர் தின வாழ்த்தாக சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:
விளையாட்டு உள்பட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனைகளைப் பெண்கள் நிகழ்த்தியுள்ளார்கள். தன் வழியில் அபாரமான, பலருக்கும் ஊக்கம் அளிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமான என்னுடைய பாராட்டுரை இது என்று கூறி காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
Women have achieved incredible feats in several areas, including sports. Here's a tribute to each and every woman who is incredible in her own way and an inspiration for many! #WomensDay #IWD2022
Posted by Sachin Tendulkar on Monday, March 7, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...