எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியா - பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பங்கேற்கும் முத்தரப்புப் போட்டி: கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்

மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்.

News image
Updated On :9 மார்ச் 2022, 11:14 am

DIN

இந்தியா - பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் மோதும் முத்தரப்புப் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. 

அரசியல் சூழல் காரணமாக 2012-13-க்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐசிசி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் டி20 போட்டியை நடத்த ரமீஸ் ராஜா திட்டமிட்டு இதுபற்றி ஐசிசி கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக ட்விட்டரில் ஜனவரி மாதம் தெரிவித்தார். இந்தப் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச ஆட்டங்களில் அடிக்கடி மோதும் நிலைமை உருவாகும், இதன் வழியாக அதிக வருமானமும் கிடைக்கும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை ரமீஸ் ராஜா செய்து வருகிறார். 

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் மோதும் முத்தரப்புப் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஹாக்லி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முத்தரப்புப் போட்டி எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த காலத்தில் நன்கு நடைபெற்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்புப் போட்டியை நடத்த ஆர்வமாகவே உள்ளோம். ஆஸ்திரேலியாவில் ஏராளமான இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் வசிக்கிறார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டியைக் காண அனைவரும் ஆவலாக உள்ளார்கள். இதை நாங்கள் நடத்தத் தயாராக உள்ளோம். அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.