மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி 274 ரன்கள் குவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷெபாலி வர்மா அதிரடி காட்ட, ஸ்மிருதி மந்தனா அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். ஷெபாலி வர்மா அரைசதத்தைத் தாண்டி பெரிய ஸ்கோரை நோக்கி விளையாடத் தொடங்கினார்.

ஆனால், 53 (46 பந்துகள்) ரன்கள் எடுத்திருந்த போது அவர் ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 91 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய யாஸ்திகா பாடியா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், மந்தனா மற்றும் மிதாலி ராஜ் நிதானம் காட்டினர்.

பின்னர் இருவரும் படிப்படியாக துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு மீண்டும் 5-ஐ தாண்டியது. ஸ்மிருதி மந்தனாவும் அரைசதத்தைக் கடக்க மிதாலி ராஜும் அரைசதத்தை நெருங்கினார். 

அதிரடி மாற முயற்சித்த மந்தனா 71 ரன்கள் எடுத்திருந்தபோது மசபதா கிளாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, ஹர்மன்பிரீத் கௌர் மிதாலி ராஜுடன் இணைந்து பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த இணை 42 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடியது. கடைசி கட்ட அதிரடிக்கு எண்ணி மிதாலி ராஜ் 68 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த விக்கெட்டுக்கு பிறகு இந்திய அணியால் பெரிதளவில் அதிரடி காட்ட முடியவில்லை. விக்கெட்டுகளும் விழுந்தன. ஹர்மன்பிரீத் கௌரும் சரியான டைமிங் கிடைக்காமல் அதிரடி காட்டத் திணறினார். இருந்தபோதிலும், அவர் 57 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com