புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டி20 உலகக் கோப்பை: இந்திய அணி ஆட்டங்களின் நேரங்கள்!

சிட்னி, அடிலெய்ட் நகரங்களில் நடைபெறும் அரையிறுதி மற்றும் மெல்போர்னில் நடைபெறும் இறுதி ஆட்டங்கள்...

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:04 am

DIN

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 

மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் ஆட்டங்களின் இந்திய நேரங்கள்

அக்டோபர் 23, மெல்போர்ன்: இந்தியா vs பாகிஸ்தான் - மதியம் 1.30 மணி

அக்டோபர் 27, சிட்னி: இந்தியா vs தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி - மதியம் 12.30 மணி

அக்டோபர் 30, பெர்த்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா - மாலை 4.30 மணி

நவம்பர் 2, அடிலெய்ட்: இந்தியா vs வங்கதேசம் - மதியம் 1.30 மணி

நவம்பர் 6, இந்தியா vs மெல்போர்ன்: தகுதிச்சுற்றில் தேர்வாகும் அணி - மதியம் 1.30 மணி 

சிட்னி, அடிலெய்ட் நகரங்களில் நடைபெறும் அரையிறுதி மற்றும் மெல்போர்னில் நடைபெறும் இறுதி ஆட்டங்கள் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.