பாகிஸ்தான் கேப்டன் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி!

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி!

அணியின் நலனுக்காக நடு வரிசையில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் மறுத்து விட்டதாக முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஏற்பட்ட தோல்விகளால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது. மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி பற்றி முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது:

கடந்த ஒரு வருடமாக பாகிஸ்தானின் நடு வரிசை பலவீனமாக உள்ளதை அறிவோம். நான் கேப்டனாக இருந்திருந்தால் சோயிப் மாலிக்கைத் தேர்வு செய்திருப்பேன். அவர் இல்லாவிட்டால் அணிக்குத் தலைமை தாங்க மாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் கூறியிருப்பேன். பாபர் ஆஸம் இன்னும் கூர்மையுடன் செயல்பட வேண்டும். இது ஆஸ்திரேலியா. ஷார்ஜாவோ பாகிஸ்தானோ இல்லை. கராச்சி கிங்ஸ் அணியில் பாபர் ஆஸமுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். நாங்கள் சரியாக விளையாடாதபோது 3-ம் நிலை வீரராக விளையாட வேண்டும் என பாபரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் முடியாது என அவர் மறுத்து விட்டார். ஷர்ஜீலை அப்படி விளையாடச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். அணிக்காக இதுபோன்ற சிறிய விஷயங்களை ஒரு கேப்டன் செய்ய வேண்டும். உங்களுடைய கேப்டன் ரன்கள் எடுத்து மற்றவர்களை தன்னுடைய இடத்தில் விளையாட வைத்தால், அணிக்காக தியாகம் செய்ய இருக்கிறார் என்பதை நாம் உணர்வோம். இதைத்தான் பாபர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com