திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

ராஜிநாமா செய்ய மாட்டேன்: மே.இ. தீவுகள் கேப்டன்

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன்...

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:11 pm IST

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றில் மோசமாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் விடைபெறுகிறார். 

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் நிகோலஸ் பூரன் தன்னுடைய நிலைப்பாடு குறித்து தெரிவித்ததாவது:

எதிர்காலம் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. அனைவருக்கும் இது நல்ல பாடமாக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பதைக் காலம் தான் சொல்லவேண்டும். இப்போது அவரவர் திறமையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஓய்வு, காயத்தைக் குணமாக்கும். உள்ளுக்குள் மிகுந்த வேதனையுடன் உள்ளோம். இந்த வேதனையை ஊக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வலுவான அணியாக மீண்டு வர வேண்டும். 

கேப்டன் பதவி குறித்து கடந்த சில மாதங்களாக யோசனை செய்து வருகிறேன். கிரிக்கெட் விளையாடுவது என் கனவு. இதற்கு முன்பு மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளேன் (கார் விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு பிறகு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது). இப்போது இன்னொரு சோதனை. நான் சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் உள்ளவன். இது இன்னொரு சவால். இந்தத் தோல்வி என்னைத் தடுத்து நிறுத்தாது. இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.