டிமான்ட்டி காலனி - 3 படத்தை வெளியிடத் தடை!
அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி - 3 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டிமான்ட்டி காலனி - 3 போஸ்டர்
அருள்நிதி நடித்துள்ள டிமான்ட்டி காலனி - 3 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் டிமான்ட்டி காலனி.
இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்து வெளியான டிமான்ட்டி காலனி - 2 படமும் வெற்றிபெற்றது. இரு பாகங்களும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் 3-ம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி - 3 திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமார், குரு சோமசுந்தரம் , மியா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப் படம் இதுவே என்றும் கூறப்பட்டது.
இப்படம் செப். 11 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் முன்பு அறிவித்திருந்த நிலையில், சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிப்போவதாகத் தயாரிப்புத் தரப்பில் தெரிவித்தனர். பின்னர், அக்.1 அன்று படம் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தனர்.
ஆனால், படம் அக். 1 அன்று வெளியாவதிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி அவர்களுக்குத் தெரியாமல் படத்தை வெளியிட இயக்குநர் அஜய் ஞானமுத்து திட்டமிடுவதாக தயாரிப்பாளர் விஜய் சுப்பிரமணியன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இயக்குநர் அஜய் ஞானமுத்து 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Summary
The Madras High Court has imposed an interim stay on the release of the film Demonty Colony - 3, starring Arulnithi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






