நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டனின் புதிய சாதனை! 

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

News image
Updated On :31 அக்டோபர் 2022, 9:50 am

DIN

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி அயர்லாந்து அணியுடன் மோதுகிறது. 

இதில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் சிறப்பாக விளையாடினார். 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்தப் போட்டியில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்: 

  1. ரோஹித் சர்மா - 182 
  2. மார்டின் கப்டில் - 173 
  3. ஆரோன் ஃபின்ச் - 125 
  4. கிறிஸ் கெயில் -   124 
  5. இயான் மோர்கன் - 120 
  6. விராட் கோலி -  115 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.