துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் முன்னிலை!

அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகிய இந்திய வீரர்கள் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள்.
துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா மீண்டும் முன்னிலை!
Published on
Updated on
1 min read

துபை ஓபன் செஸ் போட்டியில் 7-வது சுற்றின் முடிவில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா உள்பட 4 பேர் முதலிடத்தில் உள்ளார்கள்.  

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.

துபை ஓபன் செஸ் போட்டியில் முதல் 4 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, 5-வது சுற்றில் தோற்றதால் பின்தங்கினார்.  6-வது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதனால் 2-ம் இடத்தைப் பிடித்தார்.

இந்நிலையில் 7-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் அகோபியனை எதிர்கொண்டார். 32-வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 7-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி டிரா செய்தார். அரவிந்த் சிதம்பரம் ரினட்டை வீழ்த்தினார். இதனால் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகிய இந்திய வீரர்களும் அலெக்ஸாண்டரும் இணைந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்கள். இன்னும் இரு சுற்றுகளே மீதமுள்ள நிலையில் எந்த வீரர் இந்தப் போட்டியை வெல்வார் என செஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா விளையாடிய ஆட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.