யு.எஸ். ஓபன் போட்டியில் 3-வது சுற்றில் தோல்வியடைந்துள்ள 40 வயது செரீனா வில்லியம்ஸ் இத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சமீபத்திய தோல்விகளால் 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியாமல் டென்னிஸிலிருந்து விடை பெற்றுள்ளார் செரீனா வில்லியம்ஸ். இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காகக் கடந்த ஆறு வருடங்களாக மிகவும் போராடினார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். அதன்பிறகு நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் விளையாடியும் அவரால் வெற்றி பெற முடியாமல் போனது. இந்த வருட விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார். இதன்பிறகு வோக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் யு.எஸ். ஓபன் போட்டியின் 3-வது சுற்றில் போட்டியிட்ட செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் அஜ்லாவிடம் 7-5, 6-7 (4/7), 6-1 எனத் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருடைய 27 வருட டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
டென்னிஸிலிருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என செரீனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் மறுபரிசீலனை செய்வேனா என எனக்குத் தெரியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முடிவுயும் தருவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜய் கட்சி தொடங்கியுள்ளாா்: தொல்.திருமாவளவன்

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


