இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20: பாகிஸ்தான் த்ரில் வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)
By DIN | Published On : 26th September 2022 03:31 PM | Last Updated : 26th September 2022 03:31 PM | அ+அ அ- |

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 166 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் 88 ரன்களும், பாபர் அசாம் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 3 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்து விலாசினார் ஆசிப் அலி.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை எடுத்தது. டுக்கெட் 33, ஹாரி புரூக் 34, லியாம் டாவ்சன் 34, மொயின் அலி 29 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பாக நவாஸ், ஹாரிஸ் ராஃப் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். ஹாரிஸ் ராஃப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
7 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டங்களில் 2-2 என தொடர் சமநிலையில் உள்ளது. 5வது போட்டி புதன்கிழமை லாகூரில் நடக்கவிருக்கிறது.