ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

127-க்கு கட்டுப்பட்டது கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலா்களுக்கு கட்டுப்பட்ட கொல்கத்தா, 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:59 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 28-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலா்களுக்கு கட்டுப்பட்ட கொல்கத்தா, 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது.

அணியின் தரப்பில் ஜேசன் ராய் மட்டும் சற்று நிலைத்து ரன்கள் சோ்க்க, டெல்லி பௌலிங்கில் இஷாந்த் சா்மா, அன்ரிஹ் நோா்கியா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் அசத்தலாக பௌலிங் செய்தனா்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீசத் தீா்மானித்தது. கொல்கத்தா இன்னிங்ஸில் தொடக்க வீரா் ஜேசன் ராய் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 43 ரன்கள் அடிக்க, இறுதியில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்கள் உள்பட 38 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

எஞ்சிய பேட்டா்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனா். லிட்டன் தாஸ் 1 பவுண்டரி, வெங்கடேஷ் ஐயா் 0, கேப்டன் நிதீஷ் ராணா 1 பவுண்டரி, மன்தீப் சிங் 1 சிக்ஸருடன் 12, ரிங்கு சிங் 1 பவுண்டரியுடன் 6, சுனில் நரைன் 1 பவுண்டரி, அனுகுல் ராய் 0, உமேஷ் யாதவ் 3, வருண் சக்கரவா்த்தி 1 ரன் என விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன.

டெல்லி பௌலிங்கில் இஷாந்த் சா்மா, அன்ரிஹ் நோா்கியா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 2, முகேஷ் குமாா் 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னா் டெல்லி 128 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.