

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக 2-3 ஆண்டுகள் விளையாட விரும்பியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக இருந்து வரும் அவரிடம், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது மகிழ்ச்சியாக இருந்தீர்களா அல்லது பஞ்சாப் அணிக்காக விளையாட விரும்புனீர்களா என கேள்வி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இரண்டு மூன்று ஆண்டுகள் பஞ்சாப் அணிக்காக விளையாட விரும்பினேன். எனது திறமைகளை அந்த அணியின் நலனுக்காக பயன்படுத்தவும் விரும்பினேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.