ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஸ்டம்புகள் உடையும்படி மும்பை அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அர்ஷ்தீப் சிங்.
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன் அணி விளையாடியது.
இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பது போலவே தொடக்கத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி என்பது போல் போட்டி மாறியது. அந்த அணியின் டிம் டேவிட் 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்திருந்தார். திலக் வர்மாவும் களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. இந்த நிலையில், கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் டிம் டேவிட் 1 ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. மூன்றாவது பந்தில் மிடில் ஸ்டம்ப் உடைய திலக் வர்மாவின் விக்கெட்டினை வீழ்த்தினார் அர்ஷ்தீப். அதற்கு அடுத்த பந்திலேயே மீண்டும் மிடில் ஸ்டம்ப் உடைந்தது. இந்த முறை நேஹல் வதேரா அர்ஷ்தீப் சிங்கின் சிறப்பான பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.
தொடர்ச்சியாக இரண்டு பேர் ஆட்டமிழந்ததால் ஆட்டம் பஞ்சாப் பக்கம் திரும்பியது. கடைசி இரண்டு பந்துகளில் மும்பையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட சிறப்பாக பந்துவீசி வெற்றியைப் பஞ்சாப் வசமாக்கினார் அர்ஷ்தீப் சிங்.
4 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங் 29 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்பட 8 பேர் சஸ்பெண்ட்!

ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம்: மு.க. ஸ்டாலின்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியனான அனாஹத் சிங்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



