மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் வென்றது மூலம் ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.
கடைசி ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீசத் தீா்மானித்தது. இந்திய பேட்டிங்கில் இஷான் கிஷண் - ஷுப்மன் கில் பாா்ட்னா்ஷிப், முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 143 ரன்கள் சோ்த்தது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கில் 85, கிஷண் 77, ஹர்திக் 70, சஞ்சு சாம்சன் 51 ரன்கள் எடுத்தனர்.
கடின இலக்கை விரட்டிய மே.தீவுகள் அணியி தொடக்க வீரர்கள் முகேஷ் குமாரின் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகினர். 35.3 ஓவர்களிலேயே 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மே.தீவுகள் அணி தோல்வி அடைந்தது.
இதையும் படிக்க | இஷான்-ஷுப்மன் பங்களிப்பில் இந்தியா 351
அதிகபட்சமாக குடாகேஷ் மோட்டி 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் ஷர்துல் தாகூர் 4, முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.
தொடர்ந்து, மே.தீவுகள் - இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!

மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!

கேஜரிவாலின் விடுதலை பாஜகவுக்கான தார்மீக மரண தண்டனை! அகிலேஷ் யாதவ்
வீடியோக்கள்

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

